பொடுகு தொல்லைக்கு நிரந்தர தீர்வு. வெந்தயத்தின் அற்புதம்.!

உங்கள் தலையில் உள்ள பொடுகு தொல்லைக்கு நிரந்தரமாக தீர்வு காண வாரம் ஒரு முறை இதைச் செய்து வந்தால் போதும்.

ஆயுர்வேதத்தில் தலைக்கு வரும் பொடுகு நோயை தாருணம் என்று அழைக்கிறார்கள். தோல் வறண்டு போவதால் அலர்ஜி ஏற்பட்டு வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் பொடுகு உருவாகி உதிரும். தலை, முகம் மற்றும் காது போன்ற பகுதிகளில் இது காணப்படும். குழந்தைகளுக்கு வந்தால் இதை cradle cap என்று சொல்வார்கள். ஒரு சிலருக்கு வெயில் காலத்தில் இது அதிகமாக இருக்கும். கவனமாக இருந்து மன அழுத்தத்தைக் குறைப்பதால் இது மாறிவிடும்.

வெந்தயத்தில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளதால், இது பொடுகுத் தொல்லையை கட்டுப்படுத்த உதவும். இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டி வெந்தயத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அரைத்து, அத்துடன் சிறிது தயிர் சேர்த்து கலந்து, தலை சருமத்தில் தடவி சில மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை செய்ய பொடுகு காணாமல் போகும்.