ஒருநாள் முதலமைச்சர் ஆகும் கல்லூரி மாணவி.! காரணம் என்ன?!

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, உத்தரகாண்ட் மாநிலத்தின் ஒரு நாள் முதல்-அமைச்சராக கல்லூரி மாணவி ஒருவர் பணியாற்ற உள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் ஒரு நாள் முதல்-அமைச்சராக, ஹரித்வாரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஸ்ரீஸ்தி கோஸ்வாமி, தேசிய பெண்கள் குழந்தை பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பணியாற்ற உள்ளார். இது அம்மாநில மக்களையும், நாட்டு மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


உத்தரகாண்டின் கோடைக்கால தலைநகரான கெயிர்செயின் பகுதியில் உள்ள முதல்-அமைச்சர் அலுவலகத்தில் வரும் ஜனவரி மாதம் 24 ஆம் தேதி, தேசிய பெண்கள் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஒருநாள் முதலமைச்சராக 19 வயது மாணவி கல்லூரி மாணவி ஸ்ரீஸ்தி கோஸ்வாமி பணியாற்ற உள்ளார். அப்போதே மாநில அரசின் பல்வேறு நலத் திட்டங்களையும் இவர் ஆய்வு செய்ய இருக்கிறார்.

தனக்கு கிடைத்த மிகப்பெரிய ஒரு வாய்ப்பை பற்றி கல்லூரி மாணவி ஸ்ரீஸ்தி கோஸ்வாமி தெரிவிக்கையில், "இந்த அறிவிப்பை இதுவரை நம்ப முடியவில்லை. இது உண்மையா என்று கூட என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் மிக பெரும் மகிழ்ச்சியிலும், உற்சாகத்திலும் உள்ளேன்.


அதே சமயத்தில் மக்கள் நலத் திட்டப் பணிகளை மேற்கொள்ளும்போது, இளைஞர்கள் சிறந்த முறையில் செயல்பட வேண்டும் என்பதை நிரூபிக்கும் வகையில் நான் எனது சிறந்த பணியை ஒருநாள் முதல்வராக இருக்கும்போது வெளிப்படுத்துவேன்." என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2018 முதல் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்று வரும் சிறுவர்களுக்கான சட்டமன்றத்தில் இதே கல்லூரி மாணவி தான் முதல்வராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஒருநாள் முதல்வராக பதவியேற்கும் போது அடல் ஆயுஷ்மான் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய இருக்கிறார் என்று அம்மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.