தோப்புக்கரணத்தால் இவ்வளவு நன்மைகள் உள்ளதா!

தண்டனையாக கருதப்படக்கூடிய தோப்புக்கரணம் நமது முன்னோர்களின் வழிபாட்டின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. இந்த தோப்புக் கரணத்தை நாள்தோறும் போடுவதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தோப்புக்கரணத்தின் நன்மைகள்

தோப்புக்கரணம் போடுவது என்றாலே பள்ளிகூடங்களில் மாணவர்களுக்கு கொடுக்கக்கூடிய தண்டனையாக தான் தற்போதெல்லாம் கருதப்படுகிறது. ஆனால் இந்த தோப்புக்கரணம் போடுவதால் நமது வலது கைவிரல்கள் இடது கைவிரல்கள் வலது காது மடல்கள் ஆகியவற்றை பிடித்து உட்கார்ந்துகொண்டு எழுகிறோம். தோப்புகரணம் போடும் பொழுது நமது மூளையில் உள்ள நரம்புகள் தூண்டப்பட்டு புத்துணர்ச்சியை தருவதுடன் மனம் ஒருநிலையில் மாறுவதுடன் உடலில் உள்ள ரத்த ஓட்டம் சீராக இயங்கவும் உதவுகிறது. ஒருவர் தோப்புக்கரணம் போடும் பொழுது அவருடைய தோள்பட்டை அளவுக்கு கால்களை விரித்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட்டு பழகி அதன் பின் கால்களை சேர்த்து வைத்து தோப்புக்கரணம் போட ஈசியாக பழகி விடலாம். ஆனால் நாம் சாதாரணமாக உட்கார்ந்து எழக்கூடாது, உட்காரும் பொழுது மூச்சை உள்ளிழுத்து எழும் போது மூச்சை வெளிவிட வேண்டும்.

இவ்வாறு செய்யும்பொழுது நமது தண்டு வடத்தில் உள்ள நரம்புகள் வலுப்பெறும். இதன் மூலம் மன அழுத்தம், மனச் சோர்வு, தலைவலி ஆகியவை நீங்கி உடல் புத்துணர்ச்சி பெற்று ஆரோக்கியமாக வாழலாம். அக்குபஞ்சர் புள்ளிகள் என்று சொல்லப்படக்கூடிய உடலின் முக்கியமான சில பகுதிகளில் உள்ள நரம்புகள் தூண்டப்படுவதால் நரம்பு மண்டலம் முழுவதும் ஆரோக்கியமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. ஒரு நாளைக்கு 15 முதல் 20 முறை தோப்புக்கரணம் போட்டாலே போதும். ஆட்டிஸம் எனும் வளர்ச்சி குறைபாடு நோய் குணமாக உதவுவதுடன் மன கவலைகள் அனைத்தும் நீங்குகிறது. மேலும் நினைவாற்றல் அதிகரிக்க உதவுவதுடன் சுறுசுறுப்புடன் காணப்படும் உதவுகிறது.