சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு! 

மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Personal Assistant மற்றும் Clerk பதவிகளுக்கு காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மொத்தம் 77 காலி பணியிடங்கள். பிப்ரவரி 3 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

வயது வரம்பு: 01.07.2020 தேதி படி 18 வயது முதல் 45 வயது வரைக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: Personal Assistant to the Honourable Judges:
Bachelor Degree in Science, Arts, Commerce, Engineering, Medicine (under 10+2+3 or 11+1+3 pattern) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Personal Assistant & Personal Clerk:

Bachelor Degree in Science, Arts, Commerce, Engineering, Medicine (under 10+2+3 or 11+1+3 pattern) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த பணிகளுக்கு Shorthand and Typewriting in English and Tamil - Higher/Senior Grade முடித்திருப்பது அவசியம்.

சம்பளம்:

Personal Assistant to the Hon'ble Judges: ரூ. 56 ஆயிரத்து 100-லிருந்து 1 லட்சத்து 77 ஆயிரத்து 500/- + Spl. Pay வழங்கப்படுகிறது.

Personal Assistant (to the Registrars): ரூ. 36 ஆயிரத்து 400-லிருந்து 1 லட்சத்து 15 ஆயிரத்து 700 ரூபாய் வரை வழங்கப்படுகிறது.

Personal Clerk (to the Deputy Registrars): ரூ. 20 ஆயிரத்து 600-லிருந்து 65 ஆயிரத்து 500 ரூபாய் வரை வழங்கப்படும்.

தேர்வு முறை, கட்டணம் மற்றும் கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும் https://www.mhc.tn.gov.in/recruitment/docs/no_159_2020.pdf

https://www.mhc.tn.gov.in/recruitment/login என்ற இணையதளம் சென்று விண்ணப்பிக்கலாம்.