சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் மிகை ஊதியம் வழங்கப்படும். அரசாணை வெளியீடு!

  தமிழகத்தில் சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் மிகை ஊதியம் வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு கணக்கில் சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு தற்காலிக மிகை ஊதியம் ரூபாய் 3 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது .பொங்கல் பண்டிகையை கொண்டாட ஏதுவாக சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.