பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் தமிழகம் முழுவதும் வழங்கப்படும். முதல்வர் அறிவிப்பு !

 தமிழகம் முழுவதும் இன்று 2500 ரூபாய் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பொதுமக்களுக்கு ஏற்கனவே வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணியும் நடைபெற்று வந்துள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் அவர்களின் டோக்கனில் குறிப்பிட்டுள்ள  தேதி, நேரத்தை பார்த்து பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுக்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளார்கள்.

 பொங்கல் பரிசு தொகுப்பு பச்சரிசி ஒரு கிலோ, சர்க்கரை ஒரு கிலோ, முந்திரி, திராட்சை, ஏலக்காய், ஒரு முழுநீள கரும்பு ஆகியவை இருக்கும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு பெரும் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றியும் பொருட்களை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.