தமிழகத்தில் வரும் நான்கு நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

 தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்களில் அடுத்த  நான்கு நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கிழக்கு திசை காற்றாலைகளின் காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,