டோக்கன் இல்லையென்றாலும் பொங்கல் பரிசு வழங்கப்படுமா? 

 டோக்கன் இல்லை என்றாலும் பொங்கல் பரிசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் தெரிவித்துள்ளார். பொங்கல் பரிசு தொகுப்பானது 2 கோடியே 7 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் நியாய விலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார் ..மேலும் பொங்கல் தொகுப்பு பொருட்கள் சரியாகக் கொடுக்கப்படுகிறதா? பொருட்கள் தரமாக உள்ளதா? என்பதை ஆய்வு செய்யவும்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் தெரிவித்துள்ளார்.