எம்.எட்.மாணவர் சேர்க்கை: நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். உயர் கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு! 

 அரசு கல்வியியல் கல்லூரிகளில்  முதுநிலை கல்வியில் பட்டப் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணைய தளம் வழியாக வரவேற்கப்படுகின்றது. இதுதொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் அரசு கல்வியியல் கல்லூரிகள் 2020-21 ஆம் கல்வியாண்டிற்கான முதுநிலை அறிவியல் பட்டப் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் வழியாக 7.1 .2021 முதல் 13. 1. 2021 வரை www.tngasaedu.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளார் .

மேலும் கல்லூரி விண்ணப்பம் பதிவு செய்ய பதிவு கட்டணம் ரூபாய் இரண்டு மட்டும் விண்ணப்பக் கட்டணம் ரூபாய் 58 சேர்த்து ரூபாய் 60 செலுத்தப்பட வேண்டும் என்றும், எஸ்சி ,எஸ்டி விண்ணப்பதாரர்கள் பதிவு கட்டணம் இரண்டு மட்டும் செலுத்தினால் போதுமானது என்றும் மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது தங்களுடைய விருப்ப வரிசைப்படி கல்லூரிகளை தேர்வு செய்தல் வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 மேலும் இது தொடர்பான ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் மாணவர்கள் 044 22351 014, 044-22 3 5 10 15 மற்றொரு எண் 044 -28 276 791 என்ற எண்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களைத் பெறலாம் என உயர்கல்வித் துறை அமைச்சர் திரு .கே.பி. அன்பழகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.