இன்று முதல் பள்ளிகள் திறப்பு. புதுச்சேரி அரசு! 

  புதுச்சேரியில் இன்று முதல் மீண்டும் 1முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

  விருப்பமுள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் எனவும் புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டும் பள்ளிகள் செயல்படும் என்றும் சுழற்சிமுறை வகுப்புகள் செயல்படும் என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. பள்ளியில் மாணவர்களுக்கு வருகை பதிவேடு கிடையாது என்பதால் விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு செல்லலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .

மேலும் பள்ளிக்கு வரும் மாணவர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றியும் செயல்படுத்த படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.