தைராய்டு அதிகமானதிற்கான சில அறிகுறிகள் என்ன...?

தைராய்டு முற்றிய நிலையில் இருந்தால், உடல் எடையானது அளவுக்கு அதிகமாக திடீரென்று நினைக்க முடியாத அளவில் அதிகரிக்கும். மேலும் உடல் மிகவும் சோர்வுடனும். குழந்தை பிறப்பதில் பிரச்சனையும் ஏற்படும்.

தைராய்டு ஹார்மோன் உடலில் அளவுக்கு அதிகமாக இருந்தால், உடல் பலூன் போன்று ஊதிவிடும். அவ்வாறு திடீரென்று உடல் எடையானது அதிகரித்தால், அது ஹைப்பர் தைராய்டு இருப்பதற்கான முக்கிய அறிகுறியாகும்.

பெண்களுக்கு தைராய்டு அதிகமாக இருந்தால், அது தைராக்ஸின் உற்பத்தியை அதிகரித்து, மாதவிடாய் காலத்தில் அதிகப்படியான இரத்தப்போக்கை உண்டாக்கும். மேலும் மாதவிடாய் சுழற்சியானது சரியாக 28 நாட்களுக்கு ஒரு முறை நடைபெறாமல், அதற்கு முன்பாகவே சீக்கிரம் சீக்கிரமாக நடைபெறும்.

தைராய்டு சுரப்பியின் செயல்பாடு முறையாக இல்லாத போது, கழுத்துப் பகுதியில் அமைந்துள்ள தைராய்டு சுரப்பியானது வீக்கமடைந்து, கழுத்தில் வீக்கத்தை உண்டாக்கும். சில சமயங்களில் கழுத்து வீக்கம், அயோடின் குறைபாட்டினாலும் நடைபெறும்.

ஹைப்பர் தைராய்டு இருந்தால், மன அழுத்தம் ஏற்படுவதோடு, மன நிலையும் சரியாக இருக்காது. எந்நேரமும் ஒருவித மன கஷ்டத்துடன், எதையும் சரியாக செய்ய முடியாத நிலையில் இருக்கும்.

ஹைப்பர் தைராய்டிசம் இருந்தால், கருத்தரிப்பது மிகவும் கஷ்டம். தைராய்டு அதிகமாக இருந்தால், அது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை அதிகமாக இருக்கும்.

ஹைப்பர் தைராய்டிசம் இருந்தால், குடலியக்கம் சீராக செயல்படாமல், மலச்சிக்கல் பிரச்சனையை உண்டாக்கும்.

மூட்டு வலி மற்றும் கடுமையான உடல் வலி போன்றவையும் தைராய்டு என்பதற்கான அறிகுறிகள் தான். மேலும் எந்த ஒரு செயலை செய்தாலும், அதைச் செய்வது மெதுவாகவும், மந்தமாகவும் இருக்கும்