பள்ளிகளை திறக்கலாமா? பெற்றோரிடம் கருத்து கேட்பு இன்று தொடங்கியது . 

 தமிழகம் முழுவதும் பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பது குறித்து மாணவர்களின் பெற்றோர் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்களிடம் ஜனவரி 8ஆம் தேதி வரை கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அவர்கள் உத்தரவிட்டிருந்தார். 

அதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் அனைத்து மேல்நிலை பள்ளிகளிலும் கருத்து கேட்பு கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகிறது. முன்னதாக கருத்து கேட்பதற்காக அனைத்து வகுப்புகளிலும் கிருமிநாசினிகள்  தெளித்து தூய்மை செய்து தனிமனித இடைவெளியோடு  இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது .

இந்த நிலையில்  பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது குறித்து ஒரு விண்ணப்பம் வழங்கப்படும் அதில் மாணவர்களின் விவரங்களை பூர்த்தி செய்து பெற்றோர்கள் பள்ளிகள் திறக்க திறக்கலாம் அல்லது திறக்க வேண்டாமா அதற்கான காரணத்தையும் பதிவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 5.30 மணி வரை கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது