பொங்கல் விடுமுறைக்கு பின். பள்ளிகள் திறப்பு எப்போது?

  பொங்கல் விடுமுறைக்கு பின் வரும் 20ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது .முதல்வர் ஒப்புதல் அளித்ததும் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாகவும் கல்வி தொலைக்காட்சி வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும சில மாதங்களாக ஊரடங்கு விதிகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு கல்வி நிறுவனங்கள் படிப்படியாக திறக்கப்பட்டுள்ளன.

 கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் 2020 டிசம்பர் இரண்டாம் தேதி  முதல் துவங்கின பாலிடெக்னிக் கல்லூரிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகள் நடத்த பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் முதல் கட்டமாக நேரடி வகுப்புகள் தொடங்குவது குறித்து ஜனவரி 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம் அனைத்து பள்ளிகளிலும் நடைபெற்றது.

 இதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க வேண்டியது  கட்டாயம் பள்ளிகளை திறக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். ஆன்லைன் வகுப்பில் பாடம் புரிவதில்லை எனவும் மாணவர்களின் கண்கள் பாதிக்கப்படுவதாகவும் தொழில்நுட்ப பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் ஆசிரியர் நேரடியாக சந்தேகங்களை போக்க ஆன்லைன் வகுப்புகள்சரியானதாக இல்லை எனவும் பெற்றோர்கள் தெரிவித்தார்கள் .அதேபோல தேசிய அளவில் நீட் மற்றும் ஜே.இ.இ. போன்ற போட்டி தேர்வுக்கு தயாராக வேண்டிய நிலையில் நேரடி வகுப்புகள் நிச்சயம் தேவை எனவும் பெற்றோர்கள் கூறியுள்ளார்கள். இதனால் தனியார் பள்ளிகளும் விதிகளை பின்பற்றி வகுப்பு நடத்த தயாராக உள்ளது. இது குறித்து பள்ளி கல்வித்துறை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ததுள்ளது.

பொங்கல் விடுமுறை முடிந்ததும் வரும் 20ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்கலாம் என பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது . பொங்கல் விடுமுறைக்கு வெளியூர் சென்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் வசிப்பிடங்களுக்கு வரவேண்டும். அதேபோல் பொங்கல் விடுமுறை முடித்து 18 மற்றும் 19ம் தேதிகளில் பள்ளிகள் திறப்பதற்கான முன்ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் இதனால் வரும் 20ஆம் தேதி தான் பள்ளிகளை திறக்க முடியும் என தலைமை ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த நிலையில் பள்ளி திறப்பு குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு முதல்வரின் ஒப்புதல் அளித்ததும் முறைப்படி பள்ளிகள் திறப்பு தேதி அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இது போன்ற பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள தமிழ்ச் செய்திவளை தளத்துடன் இணைந்திருங்கள் நன்றி.