9, 10, 12-ம் வகுப்பை போல 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் 40 சதவீத பாடங்கள் குறைப்பு

9, 10, 12-ம் வகுப்பை போல 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் 40 சத9, 10, 12-ம் வகுப்புகளை போல 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் 40 சதவீத பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு இருப்பதாக கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    பாடத்திட்டங்கள் குறைப்பு

கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறப்பது தொடர்ந்து கேள்விக்குறியாக இருந்த நிலையில், கடந்த 19-ந் தேதி முதல் கட்டமாக 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள் குறுகிய காலத்தில் அனைத்து பாடங்களையும் படிப்பது மிகவும் சிரமமாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு, பாடத்திட்டங்களை குறைக்க அரசு முடிவு செய்தது. அதன்படி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் சில குறிப்பிட்ட பாடத்திட்டங்களை குறைத்திருக்கிறது. 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 30 முதல் 40 சதவீதம் வரையில் பாடங்கள் குறைக்கப்பட்டு இருந்ததாக கல்வித்துறை சார்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு, குறைக்கப்பட்ட பாடங்கள் எவை? எவை? என்பது அடங்கிய விவரங்களும் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டன.

    40 சதவீதம் வரை...

அதன் தொடர்ச்சியாக கடந்த 25-ந் தேதி 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டன. அவர்களுக்கு 40 முதல் 50 சதவீதம் வரையில் பாடங்கள் குறைக்கப்பட்டதாக கல்வித்துறை வட்டாரத்தில் கூறப்பட்டது. இந்த நிலையில் 9, 10, 12-ம் வகுப்பை போல, தற்போது 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு இருக்கின்றன. என்னென்ன பாடங்கள் குறைக்கப்பட்டு இருக்கின்றன? என்பது குறித்த விவரங்கள் அடங்கிய ‘பி.டி.எப்.' அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. சுமார் 30 முதல் 40 சதவீதம் வரை பாடங்கள் குறைக்கப்பட்டு இருக்கிறது என ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது. 9, 10, 11, 12 ஆகிய 4 வகுப்புகளுக்கும் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. இதில் 10, 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல், 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்த வாய்ப்புகள் அதிகம் உள்ளன.வீத பாடங்கள் குறைப்பு