தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மிககனமழைக்கு வாய்ப்பு எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா? 

தமிழகத்தில்

 திருநெல்வேலி

 தூத்துக்குடி

 ராமநாதபுரம்

 விருதுநகர்

 தேனி

 திண்டுக்கல் 

கன்னியாகுமரி

  ஆகிய 7 மாவட்டங்களில்மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் அவர்களின் அறிக்கை பின்வருமாறு;

 இலங்கை மற்றும் கடல் பகுதியை ஒட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவிவருகிறது அதன் காரணமாக 12ஆம் தேதி தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நெல்லை தூத்துக்குடி ராமநாதபுரம் விருதுநகர் தேனி திண்டுக்கல் கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 கன மழை பெய்யும் மாவட்டங்கள் பின்வருமாறு:

 மதுரை

 புதுக்கோட்டை

 சிவகங்கை

  இந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் இதர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.