72 ஆவது குடியரசு தின விழா - முக்கியமான ஒருவரை பற்றி தெரிந்து கொள்வோம் - நவீன இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் 


நம மது நாட்டின் 72 ஆவது குடியரசு தின விழாவை கொண்டாட போகும் நாம், இந்த நேரத்தில் முக்கியமான ஒருவரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இன்று கல்வியிலும், அனைத்து துறைகளிலும் பல சிறப்புகளை பெற்று வரும் பெண்கள், அன்றைய நாட்களில் பெரும்பாலும் கல்வி மறுக்கப்பட்டவர்களாகவே இருந்தனர். அதிலும் சாதிய பாகுபாடுகள் காரணமாக, கல்வி வாசனையே காட்டப்படாமல் பல பெண்கள் இருந்தனர். அத்தகைய பெண்களுக்கெல்லாம் கல்வி கிடைக்க வழி செய்தவர் தான், சாவித்திரிபாய் புலே. 'அனைவருக்கும் கல்வி', 'பெண்களுக்கு கல்வி' என்கிற புரட்சிகர சிந்தனையை மொழிந்தவர். பெண் விடுதலையின் நாயகி. கட்டிப்போடும் கவிதையின் முன்னோடி. சாதி, ஆணாதிக்க சக்திகளை நேருக்கு நேராக எதிர்கொண்ட தீரமிக்க மக்கள் தலைவர். மகாராஷ்ட்டிராவில் கல்வி வாய்ப்பில்லாத பிற்படுத் தப்பட்ட வகுப்பிலே பிறந்தார். ஜோதிபாய் புலே எனும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடிய தீரர், இவரின் கணவர் ஆனார். அவர் இவருக்குக் கல்வி பயிற்று வித்தார். கற்றுத்தேர்ந்ததும் “ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட கல்வியை நாமே தருவோம்” என்று ஒரு பள்ளியை தொடங்கினார் (ஜோதிபாய். அதில் இந்தியா வின் முதல் பெண் ஆசிரியராக ஆனார் சாவித்திரி புலே. 

அந்நாளில், சிறுவயதில் விதவையான பெண்களின் தலையை மொட்டையடிக்கும் கொடிய நடைமுறை வழக்கத்தில் இருந்தது; அந்தப் பணியைச் செய்யும் மக்களை வைத்தே, “அதை நாங்கள் செய்யமாட்டோம்” என அறிவிக்கச் செய்தார். விதவை மறுமணங்களை தொடர்ந்து நடத்திக்காட்டினார். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட ஒரு பெண் ணைக் காப்பாற்றி, அவருக்கு பிறந்த குழந்தையைத் தன் மகன் போலவே வளர்த்து மருத்துவர் ஆக்கினார்.


இப்படிக் கைவிடப்பட்ட பெண்களைக் காப்பதற்கும், அவர்களின் பிரசவத்தைக் கவனிக்கவும் ‘பால்ஹத்திய பிரதிபந்தக் கிருஹா' எனும் இல்லத்தைத் துவக்கினார். மகாராஷ்ட்ராவை ப்ளேக் நோய் தாக்கிய பொழுது, ஆங்கிலேய அரசு நோய்த்தொற்று பரவாமல் இருக்க கடுமையான சட்டங்களைப் போட்டு, பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து மற்றவர்களைப் பிரித்து வைத்தது. அப்போது மருத்துவம் படித்து ராணுவத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த இவரின் மகன், விடுமுறைக் காக ஊருக்கு வந்திருந்தார். அவரை ஹடாஸ்பூரில் ஊருக்கு வெளியே மருத்துவமனை துவங்க வைத்தார் சாவித்திரி, நோய் பாதித்த பலரை தானே தூக்கி வந்து மருத் துவமனையில் சேர்த்து உயிரைக் காப்பாற்றினார். அவ்வாறு பத்து வயது சிறுவனைக் காக்க தூக்கிக் கொண்டு வந்த பொழுது, நோய் தொற்று ஏற்பட்டு இவர் மரணமடைந்தார். அந்தச் சிறுவன் பிழைத்துக் கொண்டான். வாழ்க்கையையே சேவையால் நிறைத்த அவரை 'இந்தியக்கல்வியின் தாய்' என்று போற்று கிறோம்.