24 கணினி ஆசிரியர் நியமனம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு!

  தமிழகத்தில் இன்று நடைபெற்ற 742 கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வில் 718 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்கள். இந்த கலந்தாய்வில் கலந்துகொண்ட 24 பேரின் நியமனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த 24 பேரும் வெளிமாநில மாணவர்கள் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளார்கள். இதனால் இந்த 24 பேர் நியமனம் தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.