வேகம் எடுஅதிகாரிகள் க்கும் தேர்தல் பணிகள்.. 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமனம் ! 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இதனிடையே, தேர்தல் தொடர்பான பணிகளை தேர்தல் ஆணையமும் விறுவிறுப்பாக செய்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
தற்போது அடுத்தக்கட்டமாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் உதவி அதிகாரிகள் பட்டியல் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


தொகுதி வாரியாக தேர்தல் அதிகாரிகள், உதவி தேர்தல் அதிகாரிகளை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பட்டியலை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று வெளியிட்டார்.

விரைவில் தேர்தல் தொடர்பான வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால் அதற்கு முன்பாகவே பணிகளை முடிக்கும் வகையில், மாநில தேர்தல் அதிகாரி விரைவாக பணிகளை செய்து வருகிறார்