கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலி சான்றிதழ் கொடுத்து ஆசிரியர் பணியில் சேர்ந்த நபர் 21 ஆண்டுகளுக்கு பிறகுஅம்பலம் !
தற்போது கைது செய்யப்பட்டுள்ள. இவர் காவேரிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கடந்த 1999ஆம் ஆண்டு ஆசிரியர் பணியில் சேர்ந்தார். மிட்ட அள்ளி புதூர் அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார் .இந்நிலையில் கடந்த 2019 இவர் மீது புகார் மனு அளிக்கப்பட்டது. அதில் அவர் போலி சான்றிதழ் கொடுத்து பணி நியமணம் பெற்றதாக முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பப்பட்டது.
விசாரணையில் ராஜேந்திரன் பணம் கொடுத்து போலியாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு மற்றும் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி சான்றிதழ்களை பெற்று பணியில் சேர்ந்தது அம்பலமானது.
இவர் பத்தாம் வகுப்பு கூட தேர்ச்சி பெறவில்லை என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவேரிப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ராஜேந்திரன் தேடி வந்த நிலையில் விசாரணைக்காக காவேரிப்பட்டினம் வட்டார கல்வி அலுவலகத்துக்கு வந்த ராஜேந்திரனை போலீஸார் கைது செய்தனர். மேலும் இது போன்ற பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள தமிழ்ச் செய்திவளை தளத்துடன் இணைந்திருங்கள் நன்றி.
0 Comments
Post a Comment