10 &11 ஆம் வகுப்பு தேர்வர்களுக்கு பொதுத்தேர்வு கட்டணம் அறிவிப்பு!.

 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எழுத பொதுத்தேர்வு கட்டணம் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் +1 படிக்கும் மாணவர்கள் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாணவர்களின் அனைத்து விவரங்களையும் சரி பார்த்து பிப்ரவரி6ம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருத்தம் இருந்தால் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 11ம் தேதி வரை இணையதளத்தில் செய்ய வேண்டும் எனவும் அதேபோல் பள்ளிகளின் விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் உறுதிமொழி படிவத்தில் மாணவர்களின் பெற்றோர் கண்டிப்பாக கையொப்பமிட வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

தேர்வு கட்டணம்:

 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள அனைத்து பள்ளி மாணவர்களும் தேர்வு கட்டணம் ரூ.100 ,மதிப்பெண் சான்றிதழ் கட்டணம்  ரூ.10 சேவை கட்டணம் ரூ.5 என மொத்தம் ரூ.115 ரூபாய் செலுத்த வேண்டும்.


 பதினோராம் வகுப்பு பயிலும் மாணவர்கள் செய்முறைத் தேர்வுகள் அடங்கிய பாடத்தொகுப்பு படிப்போர் தேர்வு கட்டணம் ரூ.200 மதிப்பெண் சான்றிதழ் கட்டணம் ரூ.20 சேவை கட்டணம் ரூ.5 என மொத்தம் ரூ.225 ரூபாய் செலுத்த வேண்டும். செய்முறை இல்லாத பாடங்கள் அடங்கிய தொகுப்பில் படிப்போர் தேர்வுக் கட்டணமாக ரூ.150 மதிப்பெண் சான்று கட்டணம்ரூ. 20 சேவைக்கட்டணம் ரூ.5 என மொத்தம் 175 என மாணவர்களிடம் தேர்வு கட்டணம் பெறவேண்டும்.

 தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 அதேபோல அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் தவிர இதர பயிற்றுமொழி படிக்கும் எஸ்சி, எஸ்டி, எம்பிசி,எஸ்சிஏ, பிரிவினருக்கு கண் பார்வை, கேட்கும் திறன் ,பேசும் திறன் அற்றவர்களுக்கு தேர்வு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.