10,12 ம் வகுப்புகளில் முதல் நாளில் 85 சதவீதத்திற்கு மேல் மாணவர்கள் வருகை...!
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளில் 85 சதவீதத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வருகைப் புரிந்துள்ளனர்.
கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 25ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டன. இதையடுத்து, 2020-21 கல்வியாண்டிற்கான வகுப்புகள் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டன. இதற்கிடையில் கொரோனா தொற்று சற்று குறைந்த நிலையில் நவம்பரில். பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்தது. அரசின் இந்த முடிவிற்கு பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அதனால் அரசு தனது முடிவை ஒத்திவைத்தது.
இதைத் தொடர்ந்து ஜனவரி 6,7ஆம் தேதி பள்ளிகள் திறப்பது குறித்து அனைத்து பள்ளிகளிலும் பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், பொதுத்தேர்வு எழுத உள்ள சுமார் 19 லட்சம் மாணவர்களுக்கு இன்று முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு நேரடியாக வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 10 மற்றும்.12ம் வகுப்புகளில் 19,20,013 மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில் பெற்றோர்கள் சம்மத்துடன் 85 சதவீதத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்துள்ளனர்.
0 Comments
Post a Comment