10ம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 மாணவர்களின்பெயர் பட்டியல் தயாரிக்க அரசு அனுமதி
10ம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், ‘ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு சென்று பெயர் பட்டியல் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும். மாணவர்கள், பெற்றோர்கள் இதற்காக பள்ளிக்கு அழைக்கப்படுவார்கள். பணியின்போது தேர்வு கட்டணமும் மாணவர்கள் செலுத்த வேண்டும். இந்த பணிகளின் போது சமூக இடைவெளி
கடைபிடித்தல், முகக் கவசம் அணிதல், கிருமி நாசினி உள்ளிட்ட நெறிமுறைகள் பின்பற்ற வேண்டும்’ இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
0 Comments
Post a Comment