சென்னை to சேலம் எட்டு வழி சாலை தடை தொடரும் உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு!

  நமது தமிழ் செய்தி வலைதளத்திற்கு கிடைத்த தகவல்கள் இதோ: சென்னை to சேலம் எட்டு வழி சாலை தடை தொடரும் என உச்ச நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.சேலம்  to சென்னைக்கும் இடையே உள்ள சாலை போக்குவரத்தை மேம்படுத்த அதிவிரைவு சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு அதன்படி மத்திய அரசின் "பாரத்மாலா" திட்டத்தின் கீழ் பத்தாயிரம் கோடி மதிப்பில் சென்னை to சேலம் எட்டு வழி சாலை திட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

 இதற்காக பின்வரும் மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றது. எந்தெந்த மாவட்டங்கள் என பார்க்கலாம்!

 சேலம்

 தர்மபுரி 

வேலூர்

 திருவண்ணாமலை

 காஞ்சிபுரம்

 ஆகிய 5 மாவட்டங்களில் ஆயிரத்து 900 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் விவசாயிகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்த நிலையில், நில உரிமையாளர்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் அவர்கள் அனைவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் 50க்கும் மேற்பட்ட மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்

. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து சாலை திட்ட இயக்குனர் தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி  கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் எட்டு வழி சாலை திட்டம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளித்தது.

 அதில் சேலம் to சென்னை எட்டு வழி சாலை தடை தொடரும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. இது விவசாயிகள் மற்றும் பல்வேறு கட்சியினர் கட்சித் தலைவர்களும் இந்த தீர்ப்பை வரவேற்று உள்ளார்கள் .இந்த தீர்ப்பு விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒரு தீர்ப்பாக உள்ளது. நன்றி