வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம், நாளை கடைசி நாள்! 

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நவம்பர் 16ஆம் தேதி துவங்கியது .அன்றைய தினம் அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய, வரும் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். வாக்காளர்கள் வசதிக்காக கடந்த மாதம் 21 மற்றும் 22ம் தேதிகளில் அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற்றது. கடந்த 21ஆம் தேதி நடந்த முகாமில் 5.43 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில்4.38 விண்ணப்பங்கள் பெயர் சேர்க்க கோரி வரப்பட்டுள்ளன. அதேபோல் 22ஆம் தேதி நடந்த முகாமில் 8.03 விண்ணப்பங்கள் வந்தன .இதில6.14 பேர் விண்ணப்பித்திருந்தனர். மீண்டும் அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் இன்று சிறப்பு முகாம் நடைபெற்றது. நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் நடக்க உள்ளது. என்றும் இந்த வாக்காளர் சிறப்பு முகாமில் தங்கள் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய, விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி இந்த மாதம் 15ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த முகாமிற்கு செல்ல முடியாதவர்கள் www.nvsp.in என்ற இணையதளத்திலும், VOTER HELP LINE மொபைல் ஆப் வழியாக விண்ணப்பிக்கலாம். இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள நமது தமிழ் செய்தி வளை தளத்துடன் இணைந்திருங்கள் நன்றி.