தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் சென்ற ஆண்டு கொடுத்த பஸ் பாஸை பயன்படுத்தலாம்! 

 போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு !கொரோனா தொற்று காரணமாக கடந்த 8 மாதங்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. இதனால்

 பழைய இலவச பஸ் பாஸ் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என போக்குவரத்து துறை அமைச்சர் திரு எம் .ஆர். விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். தற்போது புதிய பஸ் பாஸ்கள் வழங்க முடியாத சூழ்நிலை நிலவுவதால் பழைய பஸ் பாஸ்கள் வைத்து மாணவர்கள் கல்லூரிக்கு சென்று வரலாம் என அவர் தெரிவித்துள்ளார்.