பனைமரம் ஏறும் தொழிலாளியின் அசத்தல் சாதனை!

 நமது தமிழ் செய்தி வளை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் இதோ. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளத்தை சேர்ந்த பால்பாண்டி என்ற பனை ஏறும் தொழிலாளி இவர் பனை ஓலையால் பலவிதமான பொருட்களை செய்து அசத்தி வருகிறார்.

 அந்த வகையில் இவர் பல்வேறு  உருவ பொம்மைகள், விளையாட்டு பொருட்கள், போன்றவற்றை இவர் செய்து அசத்தி வருகிறார். அதில் இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின்  நினைவு நாளை ஒட்டி 7 அடி உயரத்தில்  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் உருவச்சிலையை பனை ஓலையால் தயார் செய்து அசத்தியுள்ளார்.

 இவர் இந்த உருவபொம்மையை செய்வதற்கு தனக்கு மூன்று மாத கடுமையான உழைப்பு தேவை பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அருகில் உள்ள ஊர் பொதுமக்கள் அனைவரும் இந்த உருவ பொம்மையை பார்த்து தற்போது இவரை பாராட்டி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இது போன்ற பல தகவல்களை தெரிந்து கொள்ள தமிழ்ச் செய்திவளை தளத்துடன் இணைந்திருங்கள் நன்றி.