தமிழகத்தில் நாளை கல்லூரிகள் திறப்பு. விருப்பமுள்ளவர்கள் நேரில் பங்கேற்கலாம்!!

 


கடந்த சில மாதங்களாக அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வப்போது தேர்வுகளும் ஆன்லைன் வழியாகவே நடத்தப்பட்டு வருகிறது.

  நாளை அதாவது டிசம்பர் மாதம் 7ஆம் தேதி அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட உள்ள நிலையில் விருப்பம் உள்ளவர்கள் மட்டும் கல்லூரிக்கு வரலாம் என்றும் மற்றவர்கள் ஆன்லைனில் பங்கேற்கலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

 இதையடுத்து கல்லூரிகளில் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் அவர்கள்  வெளியிட்டுள்ளார்.

* கல்லூரிகள் வாரத்துக்கு ஆறு நாட்கள் மட்டும் செயல்பட வேண்டும். 

* கொரோனா அறிகுறி உள்ள மாணவர்கள் கல்லூரியில் அனுமதிக்கக்கூடாது.

* 50 சதவீத மாணவர்களை கொண்டு சுழற்சி முறையில் கல்லூரிகளை வகுப்புகளை நடத்தலாம்.

* பேராசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட அனைவரின் உடல் வெப்பநிலையை கட்டாயம் பரிசோதிக்க வேண்டும்.

* கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

* அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். கைகளை தூய்மை செய்ய  வேண்டும்.

 எனவும் அவர் தெரிவித்துள்ளார். மாணவர்கள் விடுதியில் ஒரு அறைக்கு ஒருவர் மட்டுமே தங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.