கட்டணமில்லா பேருந்து பயணம் .தமிழக அரசு உத்தரவு! யார் யாருக்கெல்லாம் தெரியுமா?

  தமிழக போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழகத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட சுதந்திர போராட்ட வீரர்கள், அவர்தம் வாரிசுதாரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் எல்லை காவலர்கள் ஆகியோருக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட உள்ளதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் திரு எம் ஆர் விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 மேலும் வயது முதிர்வு காரணமாக சம்பந்தப்பட்டவர்கள் தனியாக பயணம் செய்ய இயலாத நிலையில் உடன் பயணிக்கும் உதவியாளருக்கும் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணச் சலுகை வழங்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

 அதன்படி கடந்த 24.03. 2020 அன்று போக்குவரத்து துறையின் மானிய கோரிக்கையில் 60 வயதிற்கு மேற்பட்ட சுதந்திர போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் எல்லை காவலர்கள், அவர்தம் வாரிசுதாரர்கள், உடன் செல்லும் உதவியாளர் ஒருவர் கட்டணமில்லா பயண அட்டை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்களில் சம்பந்தப்பட்டவர்கள் பெற்று பயனடைய கேட்டுக்கொள்ளப்படுவதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்துள்ளார்.