நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு கட்டாயம் உண்டு . பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

  கொரோனா தொற்று காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு உள்ள இந்த நிலையில்  அனைத்து தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாகவும் படங்கள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது.  நடப்பு கல்வியாண்டில் பொதுத் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அறிவித்துள்ளார். இதுபற்றி முதலமைச்சருடன் கலந்து பேசி பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்படும் எனவும் நமது பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அறிவித்துள்ளார்.