ஜனவரி முதல் பள்ளி கல்லூரிகளை திறக்காவிட்டால் இந்திய மாணவர் சங்கம் போராட்டம் நடத்துவதாக எச்சரிக்க

 ஜனவரி மாதம் முதல் பள்ளிகள் திறக்க வில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய மாணவர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது .இது தொடர்பாக இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய தலைவர்வி.பி.சானூ, பொதுச் செயலாளர் மயூக் பிஸ்வாஸ்  இருவரும் சேர்ந்து கூட்டாக வெளியிட்ட அறிக்கை: கொரோனா தொற்று காலத்திலிருந்து நாடு முழுவதும் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன

. தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் நடைபெற்றாலும் அரசின் கல்வி நிறுவனங்களை மீண்டும் முழுமையாக திறப்பது குறித்த விரிவான திட்டம் எதுவும்  இல்லை ,எனவும் நேரடி கற்ற தடைப்பட்ட சூழலில் ஆன்லைன் மூலம் இணையத்தில் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதிவேக இணையம், தனியறை உள்ளிட்டவை தேவைப்படக்கூடிய கல்வி எல்லோருக்கும் சாத்தியம் ஆவதில்லை .லேப்டாப், குறைந்தபட்சம் ஸ்மார்ட்போனை கூட வாங்க முடியாத சூழலில் விளிம்புநிலை, ஏழை மாணவர்களுக்கான கற்றல் வாய்ப்பை இழந்து தவிக்கிறார்கள். ஸ்மார்ட்போன் வாங்க வழியில்லாமல் பல மாணவர்கள் தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்கள். இவற்றை யாரும் மறக்கவே முடியாது.

அதே போல குழந்தை தொழிலாளர் பிரச்சனை அதிகரித்துள்ளது. குழந்தை மீதான குடும்ப வன்முறை இந்த காலகட்டத்தில் அதிகரித்துள்ளது. பெண் குழந்தைகளுக்கு கல்வி தடைபட்டுள்ளது .குறிப்பாக பெண்களுக்கு கட்டாய திருமணம் போன்றவை இந்த காலகட்டத்தில் நிகழ்ந்துள்ளது. எனவே கல்லூரி மாணவர்களிடையே இறுதி ஆண்டு தேர்வுகள் கட்டாயப்படுத்தப்பட்டு நடத்தப்பட்டபோது கல்லூரிகளை இன்னும் திறக்காதது ஏன் தொழிலதிபர்கள் அரசை கட்டாயப்படுத்தி மால்களையும், திரையரங்குகளையும் திறக்க வைக்கும்போது வகுப்புகளை ஏன் திறக்கக்கூடாது என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

  பள்ளி, கல்லூரிகளை அரசு திறக்காவிட்டால் வரும் ஜனவரி மாதம் முதல் தேசிய அளவிலான போராட்டம் நடத்தப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பயனுள்ள  தகவல்களை தெரிந்து கொள்ள தமிழ்ச் செய்தி வளைதளத்துடன் இணைந்திருங்கள் நன்றி.