சென்னையில் நடிகர் சங்க அலுவலகத்தில் தீ விபத்து முக்கிய ஆவணங்கள் தீயில் கருகி சேதம்!!

  சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகம் இயங்கி வருகிறது. இதில் திடீரென இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது இந்த தீயில் முக்கிய ஆவணங்கள் தீயில் கருகி சேதமாயின, அதாவது கணிப்பொறிகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதம் ஆயின .இந்த தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 இந்த விசாரணையில் முதற்கட்டமாக மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்க கூடும் எனவும் முதற்கட்ட விசாரணையில் போலீசார்கள் தெரிவித்துள்ளார்கள். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ,கடந்த ஆண்டு நடைபெற்ற நிலையில் இன்னும் முடிவு வெளியிடப்படாத நிலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டது நடிகர் சங்கத்தினரிடையே  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.