தமிழகத்தில் அரையாண்டு தேர்வு ரத்து! பள்ளிக்கல்வித்துறை முடிவு!

 கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி வருகிறது. அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

 பள்ளிகள் திறக்கப்படாத சூழ்நிலை தற்போது நிலவி வருவதால் அரையாண்டு தேர்வு ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. வழக்கமாக ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 14ஆம் தேதி முதல் அரையாண்டு தேர்வுகள் நடைபெறும். பள்ளிகள் திறக்கப்படாத இந்த நிலையில் இந்த வருடம் அரையாண்டு தேர்வு நடைபெறாது என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பள்ளிகள் திறக்கப்படாததால் தேர்வுகளை நடத்த வேண்டாம் என அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுகு, முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தி உள்ளார்கள். தனியார் பள்ளிகள் மட்டும் விருப்பம் உள்ள மாணவர்களுக்கு இதுவரை நடத்தப்பட்ட பாடங்களுக்கு மட்டும் மாதிரி தேர்வை நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.