இன்று முதல் தமிழகத்தில் இருந்து பேருந்துகள் நிறுத்தம். எங்கு செல்வதற்கு தெரியுமா?

 பெங்களூர் உட்பட கர்நாடக மாநிலம் முழுவதும் இன்று முதல் ஜனவரி இரண்டாம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப் படுவதாக அம்மாநில முதலமைச்சர் எடையூரப்பா அவர்கள் தெரிவித்துள்ளார். தினமும் இரவு 11 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .

பால், காய்கறி, மருந்து பொருட்களும் கொண்டு செல்லக்கூடிய வாகனங்களுக்கு எந்தவித தடையும் கிடையாது என்றும், மருந்தகங்கள், மருத்துவமனைகள் போன்ற அவசரகால பணிகளில் இருக்ககூடிய நிறுவனங்கள் இரவு நேரத்தில் திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்பட்டு வந்த தமிழக அரசு பேருந்துகள் இரவு நேரம் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சேலம் திருவண்ணாமலையில் இருந்து ஓசூர் வழியாக பெங்களூர் செல்லும் பேருந்துகள் இரவு நேரத்தில் இயங்காது என கர்நாடக மாநில அரசு அறிவித்துள்ளது .