உலக சாதனை படைத்த தமிழ் சிறுமி! அப்படி என்ன செய்தார் இவர்? 

கொரோனா நோய் தொற்று காரணமாக அனைத்து பள்ளிகளும் ,கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மாணவர்கள் பல்வேறு சூழ்நிலைகளில் பல்வேறு விதமான கலைகளை கற்றுக் கொண்டு உள்ளார்கள். அந்த வகையில் சென்னை பழைய வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த 9 வயது சிறுமி லஷ்மி சாய் ஸ்ரீ அதே பகுதியில் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார் . கொரோனா ஊரடங்கை இந்த சிறுமி  பயனுள்ளதாக மாற்றி அமைத்திருக்கிறார் .

இந்த சிறுமி ஒரு மணிநேரத்தில் 45 வகையான உணவுகளை சமைத்து யுனிகோ உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார் .

இந்த 9 வயது சிறுமி சென்னையில் நடைபெற்ற இந்த சாதனை முயற்சியில் தமிழர்களின் பாரம்பரிய உணவுகளான கம்பு தோசை, கேழ்வரகு இட்லி, கேழ்வரகு புட்டு என பல்வேறு வகையான சிறுதானிய உணவு வகைகள் மற்றும் அசைவ உணவுகளான மீன் வருவல், இறால் வறுவல், சிக்கன் 65 என நறுமணத்தால் ஈர்த்து விருந்து படைத்துள்ளார். கொரோனா காலத்தில் அவர் தன் அம்மாவிடம் இருந்து சமையல் கலையை கற்றுக்கொண்டு உள்ளதாகவும், அந்த சிறுமி கூறியிருக்கிறார்.

 அந்த சிறுமி  ஓய்வு நேரங்களில் தன் தாய்க்கு சிறு சிறு உதவிகளை சமையலில் செய்து வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதன் பிறகு அதன் மீது ஈடுபாடு அதிகம் ஆனதால் சற்று அதிகமான உணவு வகைகளை சமைக்க தொடங்கியுள்ளதாகவும் அந்த சிறுமி தெரிவித்துள்ளார். இந்த ஆர்வத்தை பார்த்தவர்கள் முயற்சியில் ஈடுபட்டு அதை நிகழ்த்தி காட்டியுள்ளார். இவ்வுலகில் சாதிப்பதற்கு வயது தடையில்லை என்றும்  முயற்சி தன்னம்பிக்கை என அனைத்தும் இருந்தால் எத்தகைய சாதனையையும் எளிதில்சாதித்து விடலாம் என்பதற்கு ஒரு பெரிய எடுத்துக்காட்டாக இந்த சிறுமி திகழ்ந்துள்ளார்.