நேரடி சேர்க்கை மாணவர்களுக்கு அழைப்பு! (ஓசூர் ஐ.டி.ஐ)

  ஓசூர் அரசு ஐடிஐ யில் நடக்கும் நேரடி மாணவர் சேர்க்கையில் தகுதியான மாணவ மாணவியர்கள் பங்கேற்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை அறிக்கை யாதெனில் ,ஓசூர் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கான தொழில் பிரிவில் சேர்க்கைக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், காலியிடங்களை நிரப்ப டிசம்பர் 7ஆம் தேதி முதல் வரும் 12ஆம் தேதி வரை ஓசூர் ஐடிஐ  யில் நேரடி சேர்க்கை நடைபெறும்

 எனவே 14 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட ஆண்களும் 14 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.  எட்டாம் வகுப்பு  தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒரு சில பிரிவுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான பிரிவுகளும் உள்ளது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

 மேலும் விவரங்களுக்கு

 துணை இயக்குனர், அரசினர் தொழில் பயிற்சி நிலையம், ஓசூர் ,என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசி எண்  04344 -26 2 4 5 7 என்ற தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு மேலும்  விரிவான தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தமிழ்ச் செய்திவளை தளத்துடன் இணைந்திருங்கள் நன்றி.