மின்வாரிய ஊழியர்கள் லஞ்சம் கேட்கிறார்களா ?இதோ புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள். 

 தமிழ்நாட்டில் மின்வாரிய ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் உடனடியாக மக்கள் புகார் தெரிவிப்பதற்கு தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: பொதுமக்கள் தங்களது வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்களில் ஏற்படும் மின்தடையை சரி செய்ய மின் வாரிய பணியாளர்கள் யாருக்கும் பணம் கொடுக்க வேண்டியதில்லை என தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அவர்கள்  வேறு ஏதேனும் தளவாட சாமான்கள் வாங்க வேண்டும் என்று கூறினால் பொதுமக்கள் உடனடியாக புகார் கொடுக்கலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழிப்புப் பணி அலுவலர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் விழிப்புப் பணி தமிழ்நாடு மின்சார வாரியம் .N.P.K.R.R அண்ணா சாலை சென்னை-2 என்ற முகவரியில் தெரிவிக்கலாம். புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்கள் 944 58 575 93 மற்றொரு எண் 944 585 75 94 என்ற முகவரியில் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம் என தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.