தீவிரமடைகிறது "புரெவி புயல்" சின்னம். எந்தெந்த மாவட்டங்களில் கனமழை தெரியுமா?

  டிசம்பர் மாதம் 2ஆம் தேதி புதன்கிழமை: 

 தென்காசி

 இராமநாதபுரம்

 திருநெல்வேலி

 தூத்துக்குடி

 கன்னியாகுமரி

 ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் 

புதுக்கோட்டை

 சிவகங்கை

 விருதுநகர்

 தஞ்சாவூர்

 திருவாரூர்

 நாகப்பட்டினம்

 காரைக்கால்

 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழையும் திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் ஏனைய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி வியாழக்கிழமை: 

அன்று திருநெல்வேலி

 தென்காசி

 தூத்துக்குடி

 கன்னியாகுமரி

 ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும்

 சிவகங்கை

 விருதுநகர்

 ராமநாதபுரம்

 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை முதல் மிக மிக பலத்த மழையும் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

டிசம்பர் மாதம் நான்காம் தேதி வெள்ளிக்கிழமை: 

தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.