70% பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு!

  சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் மே 4ஆம் தேதி தொடங்கி ஜூன் 10ஆம் தேதி வரை நடைபெறும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். மேலும்கொரோனா தொற்று காரணமாக அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் மாணவர்கள் பாடங்களை ஆன்லைன் வழியாக கற்றுக் கொண்டு வருகின்றனர். எனவே பாடத்திட்டத்தில் அதாவது 70 சதவீத பாடத்திட்டத்திலிருந்து மட்டுமே பொதுத்தேர்வுக்கு  வினாக்கள் கேட்கப்படும் என மத்திய கல்வி துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவர்கள் தெரிவித்துள்ளார்.