தமிழகத்தில் புரெவிப் புயலுக்கு இதுவரை 7 பேர் பலி!

  புரெவிபுயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து ஆங்காங்கே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த சூழ்நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் திருவாரூர், மன்னார்குடி, நாகை, புதுக்கோட்டை ,மயிலாடுதுறை, விழுப்புரம் ,காஞ்சிபுரம், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

 கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் ஏழாவது நாட்களாக இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை என்றும் தெரிவித்துள்ளார்கள். நேற்று மாலை 6 மணி நிலவரப்படி புயலுக்கு இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெல் , வாழை போன்ற பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. பயிர்கள் மட்டுமின்றி தங்கள் குடியிருப்பு பகுதியும் சேதமடைந்துள்ளதாக  பொது மக்கள் வேதனை தெரிவித்துள்ளார்கள்.