ஜனவரி 4ல் பள்ளிகள் திறக்கப்படும் புதுச்சேரி அரசு அறிவிப்பு!

  திட்டமிட்டபடி ஜனவரி 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே பாடங்கள் நடத்தப்படுகிறது. எனினும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வும் நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

 இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா தாக்கம் உச்சத்தில் இருந்தபோது புதுச்சேரியில் மட்டும் சற்று குறைவாகவே இருந்தது. இதனால் புதுச்சேரியில் அக்டோபர் 8-ஆம் தேதி முதல் பெற்றோர் சம்மதத்துடன் 9, 10, 11,12 மாணவர்களுக்கு சந்தேகங்களை தீர்க்கும் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஜனவரி 4ஆம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை வகுப்புகள் நடத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்து…