397 ஆண்டுகளுக்கு பிறகு வானில் நடக்கும் அதிசயம்! டிசம்பர் 21ஆம் தேதி. \நமது தமிழ் செய்தி வலைதளத்திற்கு கிடைத்த தகவல்கள் இதோ. வியாழன் சனி சரகங்கள் நெருக்கமாக வரும்  அரிய நிகழ்வு 397 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 21ஆம் தேதி வானில் நடக்க உள்ளது.

 இந்த நிகழ்வு குறித்த அறிக்கையை பிர்லா கோளரங்கத்தில் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கிரகங்களான புதனும் சனியும் கடைசியாக 1623 ஆம் ஆண்டு அருகருகே தோன்றியது அதற்கு பிறகு இந்த இரு கிரகங்களும் மிக நெருக்கமாக வரும் அரிய நிகழ்வு வரும் 21ஆம் தேதி நடக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 அப்பொழுது இந்த இரண்டு கிரகங்களும் சிறிய நட்சத்திரங்களைப் போல் தோற்றமளிக்கும் எனவும், இது கிரகங்களில் மிகப்பெரிய இணைப்பு என்று அழைக்கப்படுகிறது. எனவும் அவர் கூறியுள்ள. இந்த அரிய நிகழ்வு அடுத்ததாக வரும் 2080 ஆம் ஆண்டு தான் இந்த மாதிரியான ஒரு அரிய நிகழ்வு நடைபெறும் எனவும் அதாவது 2080மார்ச் 15ஆம் தேதி தான் இந்த மாதிரியான ஒரு அரிய நிகழ்வு நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 வரும் 21ஆம் தேதி நடக்கும் இந்த அரிய நிகழ்வுகளை நாட்டின் பல நகரங்களிலும் மாலை சூரியன் மறைவுக்கு பிறகு காண முடியும் எனவும் பிர்லா கோளரங்கத்தில் இயக்குனர் தேபி பிரசாத் துறை  அவர்கள்  கூறியுள்ளார்.