ஆந்திராவில் மர்ம நோய். அடுத்தடுத்து மயங்கி விழுந்த 200 பேர். 

 கடந்த சில மாதங்களாக கொரோனா  அச்சுறுத்தி வரும் இந்த நிலையில், புதியதாக ஆந்திராவில் 200 பேருக்கு ஒரே அறிகுறிகளுடன் நோய் ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

. ஆந்திராவில் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஏலூர் நகரில் எந்தவித தொடர்பும் இல்லாதவர்களுக்கு ஒரே அறிகுறிகளுடன் கூடிய மர்ம நோய் பாதிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் யாரும் ஒரே  பொது இடத்தில் சந்திக்காதவர்கள், இவர்கள் அனைவருக்கும் ஒரேவிதமான அறிகுறிகள் தென்படுகிறது.

 அதாவது திடீர் மயக்கம், நடுக்கம், வாந்தி, போன்ற பிரச்சினை ஏற்படுகிறது .இவர்கள் அனைவரும்  வெவ்வேறு வயது உடையவர்கள் வயது வித்தியாசம் இல்லாமல் வெவ்வேறு வயது உடையவர்களாக உள்ளார்கள். அவர்களுக்கு ஆந்திராவில் சுகாதாரத்துறை அமைச்சர் அல்லா நானி மருத்துவமனையில் அனுமதித்தவர்களை  நேரில் சந்தித்தார்.

 எலூர் மாவட்டம் முழுவதும் நோய் பாதிப்பு குறித்த கணக்கெடுக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும், அங்கு சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும் ,மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 கொரோனா நோயின் தாக்கம் தற்போது சற்று குறைந்து வரும் இந்த நிலையில் இந்த புதிய நோயினை கண்டு மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளார்கள்.