தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு (டி.என்.பி.எஸ்.சி) தேர்வில் 20 சதவீத இட ஒதுக்கீடு ஆளுநர் ஒப்புதல்!! 

 தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

 பட்டப்படிப்பு படித்தவர்கள் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளிலும், பத்தாம் வகுப்பு முடித்தவர்கள்  6 முதல் 10ம் வகுப்பு வரையிலும் தமிழ் வழிக் கல்வி பயின்று இருந்தால் மட்டுமே அரசு பணிகளில் 20 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் பயன்பெற முடியும் 

 என்று கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஆளுநரின் ஒப்புதலுக்காக 8 மாதங்களாக காத்திருந்த நிலையில் இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் தமிழ்வழிக் கல்வி பயின்ற மாணவர்களுக்கு அரசு பணிகளில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று அதற்கான ஒப்புதல் அளித்துள்ளார்.