தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

  தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மன்னார் வளைகுடா பகுதியில் உருவான வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

 மாவட்டங்களின் பெயர்கள் பின்வருமாறு: 

 செங்கல்பட்டு

 விழுப்புரம்

 கடலூர்

 பெரம்பலூர்

 அரியலூர்

 மயிலாடுதுறை

 நாகை

 தஞ்சை

 திருவாரூர்

 ராமநாதபுரம் 

நெல்லை

 தூத்துக்குடி

 காரைக்கால்

  ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிற மாவட்டங்களிலும் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.