பள்ளி மாணவர்களின் எடையில் 10% மட்டுமே புத்தக எடை இருக்க வேண்டும் மத்திய கல்வித்துறை  அறிவிப்பு! 

 இரண்டாம் வகுப்பு வரை குழந்தைகளுக்கு வீட்டுப் பாடம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் புத்தக சுமை அவர்களின் எடையில்  10% மட்டுமே இருக்க வேண்டும் என மத்திய கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

 இரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்குவதை தவிர்க்க வேண்டுமெனவும், மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஒரு வாரத்திற்கு அதிகபட்சமாக இரண்டு மணிநேரங்கள் வீட்டு பாடம் செய்ய அனுமதிக்கலாம் என்றும்,

 ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தினமும் ஒரு மணிநேரம் என்ற அளவில் வாரத்திற்குஅதிகபட்சம் ஐந்து அல்லது ஆறு மணி நேரங்கள் வீட்டு பாடம் செய்ய அனுமதிக்கலாம் என்றும் ,அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் இரண்டு மணிநேரங்கள் என்ற அளவில் ஒரு வாரத்திற்கு அதிகபட்சம் 10 அல்லது 12 மணி நேரங்கள் வீட்டுப்பாடம் அளிக்கலாம் என்றும்,

 ஆசிரியர்களும் பள்ளி முதல்வரும் எந்திரத்தனமான வீட்டுப்பாடங்களை அளிக்காமல் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் விதமாக வீட்டுப்பாடங்கள் கொடுக்கப்படுவது உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு  மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.