ஜூன் மாதம் 10, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறும். எந்த மாநிலத்தில் தெரியுமா?

  கொரோனா நோய்த்தொற்று காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஆங்கில பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது .

இந்நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என்று மேற்கு வங்க கல்வி அமைச்சர் தெரிவித்தார் .பத்தாம் வகுப்பு தேர்வுகள் முதலில் நடைபெறும் என்றும் அதன்பிறகு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்றும் மேற்கு வங்க கல்வியமைச்சர் பார்த்தாசாட்டர்ஜிஅவர்கள் தெரிவித்துள்ளார்.

 பொதுத்தேர்வுகள் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல் மார்ச் வரை நடைபெறும். சமீபத்தில் ஒரு குரோனா நோய்த்தொற்று கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த தேர்வு நடைபெறாது என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால்  தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள தமிழ்ச் செய்திவளை தளத்துடன் இணைந்திருங்கள் நன்றி.