பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வரின் இன்றைய அறிவிப்பு !   பள்ளிகள் திறப்பு குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ளார் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

 பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் நேற்று நவம்பர் 9ஆம் தேதி பள்ளிகள் பெற்றோரிடம் இருந்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில்  45 சதவீத பெற்றோர்கள் பள்ளிகளை திறக்கலாம் என்று தங்களுடைய கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. பள்ளிகள் திறப்பு குறித்து கருத்து கேட்பு அறிக்கை அடிப்படையில் வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி விரைவில் ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்