காவல்துறை அதிகாரிகளின் மனதை தாறுமாறாக நொறுக்கி போட்ட பிச்சைக்காரர் யார்? இவர்?

 

 

 அனைவரின் வாழ்விலும் ஏற்றத்தாழ்வுகள் என்பது சமமான ஒரு ஒன்றுதான் ஆனால் இவரின் வாழ்வு ஒரு புரட்டிப் போட்ட ஒரு கதையான வாழ்வு. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் இருவர்  கடந்த வாரத்திற்கு முன்பு இயல்பான ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள் அந்த நேரத்தில் சாலையில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த அவரை பார்த்த இருவரும் அவரை பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது என உணவு மற்றும் உடைகளை வாங்கி கொடுத்து இருக்கிறார்கள். ஆயினும் அவரது முகத்தில் ஏதோ ஒரு கம்பீரம் இருப்பதை அந்த காவல்துறை அதிகாரிகள் உணர்ந்துள்ளார்கள் 

.அதன் பின்னர் அந்த இடத்தைவிட்டு 2 காவல்துறை அதிகாரிகளும் செல்ல தயாரான நிலையில் அவர்களின் பெயர்களை சொல்லி அழைக்கும் சத்தம் அவர்களுக்கு கேட்டது. அந்தக் குரல் யார் என்று பின்னால் திரும்பிப் பார்த்த காவல்துறை அதிகாரிகளுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

 சிறிது நேரத்திற்கு முன்பு பார்ப்பதற்குப் பாவமாக இருந்தது உணவும், உடையும் வாங்கிக் கொடுத்த அந்த பிச்சைக்காரர் தான் இவரின் பெயர்களை சொல்லி கூப்பிடுகிறார் என்பது மிகப்பெரிய ஆச்சரியமாக இவர்களுக்கு இருந்தது. அவரிடம் சென்ற இரண்டு போலீஸ் அதிகாரிகளும் நீங்கள் யார் என்று கேட்டார்கள் உடனே அந்த பிச்சைக்காரர் தன்னுடைய பெயரை அவர்களிடம் சொல்லி இருக்கிறார் .அப்போது முகத்தில் தாடியுடன் அழுக்கான உடையிலும் இருந்த நபர் கூறிய தகவல் இரு காவல்துறையினரின் அதிகாரிகளின் மனதை தாறுமாறாக போட்டுள்ளது.

 அவர் காவல் துறையில் அதிகாரியாக பணியாற்றிய மினிஷ்மிஸ்ரா என்பதும் அவர் அதிகாரியாக பணியாற்றிய காலத்தில் காவல்துறையே ஒரு கலக்கு கலக்கியவர் என்பதும் தெரியவந்தது. இதில் அந்த இரண்டு காவல் துறையினருக்கும் மேலும் பெரிய அதிர்ச்சி அடைய முக்கிய காரணம் என்னவென்றால் அவர்கள் இருவரும் மினிஷ் மிஸ்ராவின் கீழ் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் என்பதுதான், இவர் துப்பாக்கி சுடுவதில் வல்லவரான மினிஸ்மிஸ்ரா நேர்மையான அதிகாரி எனவும் புகழ் பெற்றவர் .இவர் நல்ல வசதியான குடும்பத்தைச் சார்ந்தவர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றி திறந்துள்ளார். அவரின் குடும்பத்தினரும் அவரை கவனிக்கவில்லை என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. இருப்பினும் அதைப் பற்றிய தகவல்கள் எதுவும் தற்போது கிடைக்கவில்லை.

 பின்னர் மேல்சிகிச்சைக்காக இரண்டு காவல்துறை அதிகாரிகளும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள் .மேலும் இது போன்ற பல தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ்ச் செய்திஇணைய தளத்துடன் இணைந்திருங்கள் நண்பர்களே நன்றி!