அரியர் மாணவர்கள் தேர்ச்சி பற்றிய செய்தி.

 பல்கலைக்கழகத்திற்கு எதிரான வழக்கு விசாரணை !!நமது தமிழ் செய்தி வளைதளத்திற்கு கிடைத்த தகவலின்படி இளநிலை ,முதுநிலை பட்டப்படிப்பில் அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்று அறிவிக்க தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது .

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் ராம் குமார் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு தேர்வு எழுதாமலேயே அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், ஆகியவை அறிவித்துள்ளனர் .இது தேர்வுக்கு முழுமையாக தயார் படுத்திய மாணவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று பல்கலைக்கழக மானியக்குழு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் இதற்கு பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்து வந்துள்ளன.

இந்த நிலையில் தமிழக அரசு அரியர் மாணவர்களை தேர்ச்சி பெற்றதாக பல்கலைக்கழகம் அறிவித்தது சட்டவிரோதம் என்றும் அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பல்கலைக்கழகங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது .இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இது போன்ற பல செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நமது தமிழ்ச் செய்தி வளை தளத்துடன் இணைந்திருங்கள் நண்பர்களே நன்றி.!