ஐடிஐ தேர்வு தேதியில் மாற்றம்! 

 நிவர் புயல் காரணமாக ஐடிஐ தேர்வுகளை தமிழக அரசு ஒத்திவைத்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு :வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு நவம்பர் 23 முதல் அகில இந்திய தொழில் தேர்வு நடைபெற்று வருகிறது.

 ந நவம்பர் 25ஆம் தேதி முதல் நவம்பர் 27ஆம் தேதி வரை நடைபெறவிருந்த அகில இந்திய தொழில் தேர்வு( ஐடிஐ) தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நிவர் புயல் காரணமாக மத்திய அரசு ஒப்புதலுடன் டிசம்பர் 3 முதல் டிசம்பர் 5 வரை  மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.